வீட்டின் முற்ற பின்புறத்தில் குப்பைக்குள் பதுக்கி வைத்து சட்டவிரோத மதுபான விற்பனை, சுற்றி வளைத்து பிடித்த காங்கேசன்துறை,விசேட குற்றத்தடுப்பு பிரிவு.
[ads id="ads1"]
தொடர்சியாக அச்சுவேலி பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மது விற்பனை இடம்பெற்று வருகிறது, இவ்வாறு சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதாக காங்கேசந்துறை பிராந்திய மூத்த அத்தியட்சர் c.w சேனாதிராவிற்கு கிடைத்த தகவலையடுத்து அவரால் நியமிக்கப்பட்ட விசேட பிரிவினரால் இன்று அதிகாலை,குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது 100 கால் போத்தல் மதுபானங்களையும் வீட்டில் இரகசியமாக விற்பனை செய்த ஒருவரையும் கைது செய்தனர்.
இச்சம்பவம் புத்தூர் பகுதியில் இடம்பெற்றது வீட்டில் குப்பைகள் மண்ணுக்குள் பதுக்கி இருந்த சாராயத்தை கைப்பற்றி அச்சுவேலி பொலிஸில் நிலையத்தில் பாரப்படுத்தினர்,
[ads id="ads2"]
இதேவேளை நேற்றும் அச்சுவேலிப் பகுதியான புத்தூர் கிழக்கில 200 கால் போத்தல் மதுபானம் விசேட பிரிவினரால் கைப்பற்றப்படது குறிப்பிடத்தக்கது.
Post a Comment