முல்லைத்தீவில் பெண் ஒருவரால் கொரோனாவிற்கு மூலிகை மருந்து தயாரிப்பு - அங்கீகாரம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - குவியும் பாராட்டுகள் - Yarl Voice முல்லைத்தீவில் பெண் ஒருவரால் கொரோனாவிற்கு மூலிகை மருந்து தயாரிப்பு - அங்கீகாரம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - குவியும் பாராட்டுகள் - Yarl Voice

முல்லைத்தீவில் பெண் ஒருவரால் கொரோனாவிற்கு மூலிகை மருந்து தயாரிப்பு - அங்கீகாரம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - குவியும் பாராட்டுகள்


கொரோனா தொற்றைக் குணப்படுத்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலிகை மருந்தை தயாரித்துள்ளார். அவ்வாறு தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்திற்கு அரச அங்கீகாரம் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வருகின்ற கிருஸ்ணதாஸ் சாய்hணி என்ற பெண் ஒருவரே இந்த மூலிகை மருந்தைக் கண்டுபிடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தில் கணவனை இழந்த குறித்த பெண் நம்பிக்கையுடன் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

சுhதாரணமாக சுயதொழில் முயற்சியை ஆரம்பித்த குறித்த பெண் தற்போது உள்ளுர் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் ஒரு உற்பத்தி நிறுவனமொன்றையும் இயக்கி வருகின்றார். இந்த நிலையிலையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூலிகை மருந்தொன்றையும் கண்டுபிடித்துள்ளார்.

இவ்வாறு மூலிகை மருந்தைத் தயாரித்துள்ள குறித்த பெண்ணை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் இன்று நேரில் சென்று சந்தித்திருந்தனர். இதன் போது குறித்த மூலிகை மருந்தைப் பார்வையிட்டதுடன் குறித்த மருந்த தொடர்பிலும் ஆராய்ந்து சென்றிருந்தனர்.

ஆத்தோடு இந்தப் பெண் தயாரித்த மூலிகை மருந்திற்கு அரச அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  
0/Post a Comment/Comments

Previous Post Next Post