மேலும் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்ட 20 பேரில் 16 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய நான்கு பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போன்று முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் அவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று 39 பேருக்கான - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 14 பேர்.
( இவர்களில் 9 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட வர்கள்)
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்.
வவுனியா பொது வைத்தியசாலை - ஒருவர்.
முல்லைத்தீவு கேப்பாபிளவு தனிமைப்படுத்தல் நிலையம் - ஒருவர் ( 80 வயது முதியவர் இன்று முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இறப்பு உறுதி செய்யப்பட்டவர்)
பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் - 4 பேர் ( அரியாலை போதகரோடு கூடிய அளவில் தொடர்பை கொண்ட 20 பேரில் ஏற்கனவே 16 பேர் தொற்று உள்ளவர்களாக உறுதிப் படுத்தப்பட்டு விசேட சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில் எஞ்சியவர்கள் )
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 10 பேர்.
பாதுகாப்பு படையினர் தனிமைப்படுத்த நிலையம் கிளிநொச்சி - 5 பேர்.

Post a Comment