பலாலியில் எஞ்சிய நான்கு பேருக்கும் பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் - Yarl Voice பலாலியில் எஞ்சிய நான்கு பேருக்கும் பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் - Yarl Voice

பலாலியில் எஞ்சிய நான்கு பேருக்கும் பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர்

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கும் தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார்.

யுhழ்ப்பாணம் அரியாலை சுவிஸ் பொதகரோடு கூடிய தொடர்பைக் கொண்டிருந்த 20 பேர் பலாலியில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

 இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந் நிலையில் எஞ்சியுள்ள நான்கு பேரும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு இன்று பரிசொதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தப் பரிசோதனைகளில் குறித்த நான்கு பேரில் ஒருவருக்கும் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post