தமிழினப் படுகொலை வார இரண்டாம் நாள் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்த்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் இன்று நவாலி சென் பீற்றர் தேவாலயம் அருகில் இடம்பெற்றது .
[ads id="ads1"]
1995 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி விமானப் படையினரின் விமான குண்டு வீச்சில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்ட நவாலிசென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இன்று காலையில் இருந்து 60க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
அஞ்சலிக்காக அங்கே வந்திருந்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மறரறும் சட்டத்தரணி ந. காண்டீபன் அவையோருடன் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
[ads id="ads2"]
அதன்பின் குறிப்பிட்ட நேரத்திற்குள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களும் அஞ்சலியை செலுத்தினர்.

Post a Comment