முள்ளிவாய்க்கால் நாளில் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துங்கள் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை - Yarl Voice முள்ளிவாய்க்கால் நாளில் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துங்கள் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை - Yarl Voice

முள்ளிவாய்க்கால் நாளில் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துங்கள் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 அன்று மாலை 7.00 மணிக்கு வீடுகள் பொது இடங்களில் விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது
[ads id="ads1"]
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ம் ஆண்டு நினைவேந்தல் தினத்தில் மக்கள் தமது வீடுகளில், மாலை 7 மணிக்கு தீபங்களை ஏற்றி உணா்வுபூா்வமான அனுட்டிக்கவேண்டும் என யாழ் பல்கலைக் கழக மாணர் ஒன்றிய கோரிக்கை விடுத்துள்ளதுது.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலதுகொன்டு குறித்த கோரிக்கையின்னை யாழ் பல்கலைக் கழக மாணர் ஒன்றிய பிரதிநிதிகள் விடுத்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ம் ஆண்டு நினைவேந்தல் மே-18ம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில், சமகால சூழலில் பெருமளவு மக்களை முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூட்ட முடியாதுள்ளது. எனவே அன்றைய நாளில் மக்கள் தமது வீடுகளில் மாலை 7 மணிக்கு தீபங்களை ஏற்றி உணா்வுபூா்வமான அனுட்டிக்கவேண்டும். 

மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியம் கோாிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே மாண வா் ஒன்றிய பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா். இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில், 
[ads id="ads2"]
தமிழ் இனம் கருவறுக்கப்பட்ட நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகும். அன்றைய நாளில் படுகொலை செய்யப் பட்ட எமது மக்களுக்காக  ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலும், தாம் தங்கியிருக்கும் இடங்களிலும், வா்த்தக நிலையங்க ள் பொது இடங்களிலும் எமது மக்களுக்காக தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்துவதுடன், 

அன்றைய நாளில் உப்பும் அாிசியும், தண்ணீரும் கலந்த கஞ்சியை பருகி எமது மக்களுக்கு உணா்வுபூா்வமான அஞ்சலிக ளை செய்யவேண்டும். எனவும் எமது இனம் அன்றைய நாளில் பட்ட துன்பங்களை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post