நிர்ணய விலை நீக்கப்பட்டதால் வெளிச்சத்துக்கு வந்த பருப்பு மற்றும் டின் மீன் பொருட்கள் - Yarl Voice நிர்ணய விலை நீக்கப்பட்டதால் வெளிச்சத்துக்கு வந்த பருப்பு மற்றும் டின் மீன் பொருட்கள் - Yarl Voice

நிர்ணய விலை நீக்கப்பட்டதால் வெளிச்சத்துக்கு வந்த பருப்பு மற்றும் டின் மீன் பொருட்கள்

இலங்கையில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் பெருமளவு பொருட்கள் பதுக்கப்பட்டிருந்த நிலையில் அரசாங்கம் விடுத்துள்ள திடிர் அறிவிப்பால்  அந்தப் பொருட்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றுக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயத்தை அரசாங்கம் நீக்கியுள்ளதை தொடர்ந்து ஏராளமான டின் மீன்கள் விற்பனைக்காக கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் தற்காலிகமாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதை தொடர்ந்தே குறித்த டின் மீன்கள் மற்றும் பருப்பு தொகைகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பருப்பு ஒரு கிலோ 65 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலையும் டின் மீன் ஒன்று 100 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலையையும் நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த விலையில் இந்த இரண்டு பொருட்களும் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை என்று எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post