யாழில் உறவினர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு - இருவர் காயம் - Yarl Voice யாழில் உறவினர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு - இருவர் காயம் - Yarl Voice

யாழில் உறவினர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு - இருவர் காயம்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உறவினர்களுகக்கு இடையிலான மோதல் வாள்வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் மிருசுவில் பிரதேசத்தில் உறவினர்களுக்கடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் வாள்வெட்டில் முடிந்ததில் அதே இடத்தைச் சேந்த 40 வயதுடைய விஐயகுமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த மோதலில் இருவர் காயமடைந்த நிலையில்  சிகிச்சைக்காகயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post