இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானஉறவு எப்போதும்தொடரும் .. - Yarl Voice இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானஉறவு எப்போதும்தொடரும் .. - Yarl Voice

இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானஉறவு எப்போதும்தொடரும் ..

இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானஉறவு  எப்போதும்தொடரும் என்று
இலங்கைக்கானபாகிஸ்தான் நாட்டுதூதுவர் முகமது சாகித் அலிக் தெரிவித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு விஜயம்மேற்கொண்டு விளையாட்டு உபகரணங்களும்  அன்பளிப்புசெய்திருந்தார்
இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டின் தூதுவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பாடசாலை நிர்வாகத்தினரிடம் கலந்துரையாடிய தோடு பாடசாலை மாணவர்களுக்காக விளையாட்டு உபகரணங்களையும் கையளித்திருந்தார்

குறித்த உபகரணங்களை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்


எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் கடந்த20 வருடங்களுக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு இருக்கிறேன் இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுனரை கூட நான் சந்திக்க முயற்சித்தேன் எனினும் அவர் கொழும்பில் நிற்பதால் சந்திக்க முடியவில்லை
எனினும் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி யானது இலங்கையின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றது விளையாட்டுத்துறை கல்வித் துறையிலும் பல சாதனைகளைப் படைத்து பெருமை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக இன்று பாடசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு பாடசாலை நிர்வாக த்தினருடன் நான் கலந்துரையாடியிருந்தேன் எனினும் அவர்களுக்கு எனது ஆழ்ந்த சந்தோஷமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

 இவ்வாறானஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்ததற்காக பாடசாலைக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகப்பை இன்று நான் கையளித்தி ருக்கின்றேன்

 நாங்கள் இலங்கையை நேசிக்கின்றோம் இலங்கை மக்களை நேசிக்கின்றோம் எனினும் எனக்கு தனிப்பட்ட ரீதியில் இலங்கை மக்களிடையே ஒரு விருப்பம் இருக்கின்றது 
இலங்கை பாகிஸ்தான் உறவினை மேம்படுத்துவதற்காக நாம் இலங்கை மக்களுக்கு எம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கின்றோம் அதன்ஒரு கட்டமாகவே இன்றைய தினம் நான் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றேன் எனினும் எமது உறவு தொடரும் இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்பு  எப்போதும்தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்

இன்றைய சந்திப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் அலிக் எமது கல்லூரிக்கு விஜயத்தினை மேற்கொண்டுருந்தார் இது அவருடைய  உத்தியோகமில்லாத தனது தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு இன்றைய தினம் எமது பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் எமது கல்லூரி நிர்வாகத்தினரைசந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தார் அதன்படி அவர் எங்களை சந்தித்து எமது பாடசாலையில்உள்ள கஷ்டப்பட்ட மாணவர்களுக்காக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகப் பைகள்  மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து கொண்டு வந்த கிரிக்கெட் மட்டைகள் மற்றும் மேலும் பல விளையாட்டு உபகரணங்களையும் எமக்கு அன்பளிப்பு செய்துள்ளார் அவர் பாகிஸ்தான் நாட்டில் இருந்த வேளையில் பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தானில் பற்றிக்ஸ்கல்லூரி மிகவும் பிரசித்தி பெற்ற என்பதற்கிணங்க யாழ்ப்பாணத்தில் அதே பெயரில் இருக்கக்கூடிய எமது கல்லூரிக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையின் அடிப்படையிலே இங்கே வந்ததாகவும் தனது கருத்தினை தெரிவித்ததாகவும்  பாடசாலை அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்தார் 

0/Post a Comment/Comments

Previous Post Next Post