வடக்கு வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice வடக்கு வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

வடக்கு வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில்  வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கோரோனா தொற்றுநோயானது இலங்கையிலும் பரவி வருவது தாங்கள் அறிந்ததே. கோரோனா நோயிலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு பின்வரும் நடைமுறைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

1. தங்களது வியாபார நிலையங்களின் முன்பாக கைகழுவும் வசதிகளை ஏற்படுத்துங்கள்.

2. வியாபார நிலைய ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் வருகைதரும் வாடிக்கையாளர்களையும் முகக்கவசம் அணிவதனை உறுதிப்படுத்த வேண்டும்.

3. மேலும் தாங்கள் 2 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை சவர்க்காரமிட்டு ஓடும் நீரில் 20 செக்கன்கள் வரை கைகழுவுதல் வேண்டும்.

4. விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருள்களை வாடிக்கையாளர்கள் தேவையற்ற முறையில் தொடுவதனைத் தவிர்க்கவேண்டும்.

5. வியாபார நிலையத்தில் காற்றோட்டம் சீராக இருத்தல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மேற்படி நடைமுறைகளை பின்பற்றி சுகாதார நிலமைகளை மேம்படுத்தி கோரோனாவில் இருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சுகாதாரத் திணைக்களம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post