யாழில் இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழில் இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழில் இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி


யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகிய இரண்டு இடங்களிலும் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசொதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை என பரிசோதனை உறுதிப்படுத்தியிருப்பதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை மேற்படி இரண்டு இடங்களிலும் வடக்கு மாகாணத்தின் பல இடங்களையும் சேர்ந்த 83 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் ஒருவருக்கும் தொற்றில்லை என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

 போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 3 பேர்.

பொது வைத்தியசாலை வவுனியா - 2 பேர்.

இரணைமடு தனிமைப்படுத்தல் மையம் - 58 பேர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு நல்லூர் - 10 பேர்.

பாதுகாப்பு படை ஆதார வைத்தியசாலை கிளிநொச்சி - 8 பேர்

இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையம் - 2 பேர்.
08.05.2020  (  සිකුරාදා )

0/Post a Comment/Comments

Previous Post Next Post