முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களையும் அங்கு செய்தி கேசரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களையும் தொடர்ச்சியாக அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு மே மாதம் 13 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் தமிழ்ம் தேசிய மக்கள் முன்னணியினால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
[ads id="ads1"]
இதன் முதல்நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்ற போது அங்கு பெருமளிவலான பொலிஸாரும் இரர்னுவத்தினரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பல்வேறு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டது மட்டுமல்லாது அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக அந்த நிகழ:வுகளில் கலந்து கொண்டிருந்த பொது மக்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியியலாளர்களை பொலிஸாரும் புலனாய்வாளர்களும் புகைப்படம் எடுத்திருந்தனர். அத்துடன் அங்கு நின்றிரந்தவர்களின் பெயர் விபரங்களையும் பொலிஸார் பதிவு செய்ததுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நினைவேந்தல் நவாலியில் இடம்பெற்ற போதும் இதே போன்றே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. மேலும் நாகர் கோவிலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதே வேளை முல்லைத்தீவில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விலும் அச்சுத்தல் விடுக்கப்பட்டதுடன் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலைமையில் இன்றையதினமும் யாழில் மூன்று இடங்களில் இந் நினைவேந்தல் நிகழ:;வுகள் நடைபெற்றிருந்தன. ஆவ்வாறு நினைவேந்தல் நடைபெறும் இடங்களில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு அங்கு நின்றிருந்தவர்களின் விபரங்கள் பெறப்பட்டும் புகைப்படங்கள் எடுத்தும் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன்னாள் அமைந்துள்ள தமிழராராச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபி முன்பாக நேற்று இந் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றிருந்தது. ஆங்கு ஏற்கனவே புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு நிகழ்விற்கு வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலைமையில் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அங்கு வாகனமொன்றில் வருகை தந்த யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் குறித்த வாகனத்தில் இருந்து இறங்கும் போதே தமது தொலைபேசிகளில் புகைப்படங்களை எடுத்தவாறு நிகழ்வு இடத்திற்கு வந்தனர்.
ஆங்கு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் உட்பட செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
குறிப்பாக அங்கு நின்றிருந்த ஊடகவியியலாளர்களின் முகங்களுக்கு நேராக அருகில் வந்து தனது கைபேசியில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அதே போன்றெ அவருடன் வருகை தந்திருந்த பொலிஸாரும் அங்கு நின்றிருந்த அனைவரையும் ஓடிஓடி புகைப்படங்களை எடுத்திருந்தனர்.
இவ்வாறு புகைப்படங்களை பொலிஸார் நேரடியாக எடுத்துக் கொண்ட அதே நேரத்தில் அங்கு நின்றிருந்த புலனாய்வாளர்களும் புகைப்படங்களை எடுத்திருந்தனர். அது மாத்திரமல்லாமல் ஊடகவியிலாளர்கள் உட்பட அனைவரையும் அச்சுறுத்தி மிரட்டும் வகையில் பொலிஸார் தமது செயற்பாடுகளை முன்னெடுத்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
[ads id="ads2"]
இவ்வாறு புகைப்படங்களை எடுத்து ஊடகவியியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அங்கு நின்றிருந்தவர்களின் புகைப்படங்களை வைத்து வழக்குத் தொடரப் போவதாகவும் எச்சரிக்கையும் விடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment