ஊரடங்குச் சட்டம் தளரத்தப்படவுள்ள நிலையில் கடுமையான கட்டப்பாடுகளை விதிக்க தீர்மானம் - Yarl Voice ஊரடங்குச் சட்டம் தளரத்தப்படவுள்ள நிலையில் கடுமையான கட்டப்பாடுகளை விதிக்க தீர்மானம் - Yarl Voice

ஊரடங்குச் சட்டம் தளரத்தப்படவுள்ள நிலையில் கடுமையான கட்டப்பாடுகளை விதிக்க தீர்மானம்

நாளை திங்கட் கிழமை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகின்றது
கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்பட்டுள்ளதப்பட்டு சில இடங்களில் சில மணிநேரங்கள் தளர்த்தப்பட்டு வந்த நிலையில் நாளை திங்கள் முதல் ஊரடங்கை நீக்க போவதாக அரசு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளையதினம் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத் தீர்மானங்கள் குறித்தான வர்த்தமானியும் இன்றையதினம் வெளியிடப்பட இருக்கின்றது.
பொது இடங்களில் எச்சில் துப்புவது, வெற்றிலை உமிழ்ந்து துப்புவது என்பன தடை செய்யப்படவுள்ளன. அதேபோல தனியார் நிறுவனங்கள் கொண்டிருக்கக்கூடிய கட்டுப்பாடுகள், மருந்தகங்களுக்கான விதிமுறைகள் என்பனவும் அறிவிக்கப்படவுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post