யாழில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனையிலும் ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் - Yarl Voice யாழில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனையிலும் ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் - Yarl Voice

யாழில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனையிலும் ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர்

யாழில் இன்று 94 பேருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கு தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகிய இரண்டு இடங்களிலும் 94 பேருக்கு பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.  இதில் ஒருவருக்குமெ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு இன்று பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

யாழ் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் -  2  பேர்.

யாழ் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 6 பேர்.

பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சண்டிலிப்பாய் - 26பேர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு முல்லைத்தீவு - ஒருவர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு புதுக்குடியிருப்பு  - 10 பேர்.

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையம் -  33 பேர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு நல்லூர் - 15 பேர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post