யாழ்.போதனாவில் பி.சி.ஆர் பரிசோதணை ஆரம்பம் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழ்.போதனாவில் பி.சி.ஆர் பரிசோதணை ஆரம்பம் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழ்.போதனாவில் பி.சி.ஆர் பரிசோதணை ஆரம்பம் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதணை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதன்படி இன்று வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதணை நடத்தப்படவுள்ளது.

 மேலும் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்படும் மாதிரிகளும் இங்கு உள்ள ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post