ஆந்திராவில் இரசாயன வாயு கசிவு ஏற்பட்ட ஆலையை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice ஆந்திராவில் இரசாயன வாயு கசிவு ஏற்பட்ட ஆலையை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice

ஆந்திராவில் இரசாயன வாயு கசிவு ஏற்பட்ட ஆலையை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

ஆந்திராவில் இரசாயன வாயு கசிவு ஏற்பட்ட ஆலையை  மூடுவதற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள குறித்த ஆலையில் கடந்த 7ம் திகதி இரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஆந்திர மாநில உயிர்நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள்,  ஆலையின் உள்ளிருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எதுவும் அனுமதியின்றி மாற்றக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கு குறித்த மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 28 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post