கூட்டமைப்பு - மகிந்த பேச்சு என்பது நகைப்பிற்குரிய விடயம் - சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல் - Yarl Voice கூட்டமைப்பு - மகிந்த பேச்சு என்பது நகைப்பிற்குரிய விடயம் - சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல் - Yarl Voice

கூட்டமைப்பு - மகிந்த பேச்சு என்பது நகைப்பிற்குரிய விடயம் - சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்

மைத்திரி – ரணில் ஆட்சியில் பங்குதாரர்களாக இருந்த போது தீர்க்கப்படாத தமிழ் ம்களின் பிரச்சனைகள் குறித்து தமிழ்க்கு விருப்பமில்லாதவர்கள் ஆட்சியிலுள்ள போது தீர்த்துக் கொள்வது குறித்து பேசியதாக கூட்டமைப்பினர் கூறுவது நகைப்பிற்குரிய விசயம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கு கூட்டமைப்பினர் கோரி வந்த போதும் அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் தற்பொது பிரதமரே அழைத்துள்ளதால் எப்படியாவது அரசுடன் பேச வேண்டும் என்றும் அதனுடாக எப்படியாவது தங்களுடைய தொடர்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் தான் சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்ட சுரேஸ்பிரேமச்சந்திரன் இச் சந்திப்புக்களின் ஊடாக என்னதைச் சாதித்தார்கள் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

புpரதமர் மகிந்த ராஐபச்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் ஐனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆயினும் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது என்றும் அதற்கான தேவை இப்போது இல்லை என்றும் ஐனாதிபதி பிரதமர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இத்தகைய நிலைமையிலே தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் சந்தித்துத் கலந்துரையாட முடிவெடுத்திருந்தார்.

அந்தக் கூட்டத்தில் எந்வித முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது என்பது எல்லாலோருக்கும் தெரியும். ஏனென்றால் அது உத்தியோகபூர்வமான கூட்டமாக இல்லை. ஆனாலும் பிரதமரின் அழைப்பிற்கமைய அக் கூட்டத்திற்கு வரக் கூடிய பாராளுமன்ற உருப்பினர்களுக்கு நாட்டிலுள்ள நிலைமைகளையும் அரசாங்கமாக தாங்கள் எடுத்துன்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் கூறுவதற்கே பிரதமர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

ஆகவே அலரி மாளிகையில் நடக்கக் கூடிய கூட்டமானது பாராளுமன்றத்தை நடாத்தக் கூடிய கூட்டமாக இருக்காது. ஆயினும் பிரதமரைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்தைக் கூட்டாமல் அலரிமாளிகையில் சந்தித்துப் பேசுவதனூடாக தாம் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாரையும் சந்தித்திருக்கிறோம் அவர்களுக்கு நாட்டு நிலiமையை விளங்கப்படுத்தியிருக்கிறோம் என்று பிரதமர் சொல்வதற்கான வாய்ப்பாகத் தான் அலரிமாளிகை கூட்டம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்டது.

இதன் காரணமாக நாங்கள் உட்பட பல கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் கூட்டமைப்பு கலந்து கொண்டது. அவர்கள் என்னென்ன விடயங்கள் பேசினார்கள் என்பது தொடர்பிலும் அதனைத் தொடர்ந்ர்ந்து அந்தச் சந்திப்பின் பின்னர் அன்றையதினம் மாலையில் பிரதமரின் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து கூட்டமைப்பினர் பேசியதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது.

ஆனால் கூட்டமைப்பை பொறுத்த வரையில் புதிய ஐனாதிபதி பதவிக்கு வந்த காலத்திலிருந்து அவர்களுடனான ஒரு சந்திப்பிற்கான கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்த வந்தார்கள். ஆயினும் பிரதமரோ ஐனாதிபதியோ கூட்டமைப்பினரைச் சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தார்கள்.

அதாவது தேர்தல் முடிந்த பிற்பாடு சந்திக்கலாம் என்பதே அவர்களது பதிலாக இருந்தது. ஆனால் இப்பொழுது அரசாங்கத் தரப்பினரே அதாவது பிரதம மந்திரியே ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த போது அவர்கள் உடனடியாகவே அந்த அழைப்பை ஏற்று போனார்களே தவிர இந்தக் கூட்டங்களினூடாக இவர்கள் என்னவற்றைச் சாதித்தார்கள் என்றதொரு கேள்வி நிச்சயமாக எழுகிறது.

இக் கூட்டத்தில் முக்கியமாக அரசியல் கைதிகள் பற்றி பேசியதாகவும் அவர்களை விடுவிப்பதைப் பற்றிக் கேட்டதாகவும் அவர்களை எவ்வாறு விடுவிக்கலாம் என்பது போன்ற விடயங்களை சுமந்திரன் அவர்கள் பிரதமருக்கு சொல்வார் என்ற அடிப்படையில் பேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கிறது.

ஆனால் இதற்கு முன்னதாக இவர்களது ஆட்சிக் காலத்தில் அதாவது ஐக்கிய தேசியக் கட்சியுடனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் இணைந்து கூட்டமைப்பினர்; ஆட்சியில் இருந்த போது இந்த அரசியல் கைதிகளை இவர்களால் விடுவிக்க முடியவில்லை. ஆனால் இன்று இவர்களுக்குப் பிடிக்காத சிலர் ஆட்சியில் இருக்கிற பொழுது இவர்கள் அரசியல் கைதிகளை விடுவிப்பார்கள் என்ற தோரணையில் பத்திரிகைகளில் செய்திகள் வருவதென்பது உண்மையாகவே ஒரு சிரிப்பிற்குரிய விடயம்.

ஆனால் அவ்வாறு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டால் அது நல்ல விசயம். ஆனால் நிச்சயமாக விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுகின்றது. ஏனென்று சொல்லிச் சொன்னால் மீண்டும் அது ஒவ்வொரு பிரிவினரும் எவ்வாறு விடுவிப்பது என்பதைப் பற்றி இவர்கள் சொல்வதாகவும் அவர்கள் கேட்பதாகவும் சொல்வதென்பது அடுத்த எத்தனை வருசம் காலம் அதற்கு எடுக்குமென்ற ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது.

அதே போல ஒரு புதிய அரசியல் சாசனம் பற்றிம் குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆனால் இவை எல்லாம் முடிந்து போன விடயங்களாக கடந்த பாராளுமன்றத்திலேயே அது கைவிடப்பட்ட விசயங்களாக மாறிப் போன விசயங்களை மீண்டும் இப்போதுள்ள பிரதம மந்திரியிடம் பேசியிருக்கின்றார்கள்

ஆனால் எதிர்வரக் கூடிய தேர்தல் முடிந்த பிற்பாடு தான் இந்த நாட்டில் என்ன மாற்றத்தைக் குறித்தும் பேச முடியும். தற்போது ஒரு தேர்தலை எதிர்நோக்கியிருக்கிற சூழ்நிலையில் கூட்டமைப்பு முன்வைத்திருக்கக் கூடிய கோரிக்கைகள் பேரளவில் அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட நடைமுறையில் இவை எல்லாம் செயற்படுத்தப்படுமா என்ற ஒரு பாரிய கேள்வி எழுகின்றது.

ஆகவே இங்கு கூட்டமைப்பை பொறுத்தவரையில் எப்படியாவது மகிந்தவுடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தையை முடித்துக் கொள்ள வேண்டும். அதனூடாக எப்படியாவது தங்களது தொடர்புகளை மீண்டும் புதுப்பித்தக் கொள்ள வேண்டும். என்றதொரு காரணத்திற்காககத் தான் அந்தச் சந்திப்பு நடைபெற்று இருந்தது.

அந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் சந்திப்பு நிகழ்ந்திருக்குமென்று தான் கருதுகின்றேன். ஆனால் நிச்சயமாக இதனூடாக தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஏதாவது பிரச்சனைகள் தீர்க்கப்படுமானல் நல்ல விசயம்.
தற்போது கொரோனோ பாதிப்பு இருக்கக் கூடிய இந்த சூழலில் பல பிரச்சனைகளை ஒட்டுமொத்தமான சல மக்களும் எதிர்கொள்கின்றனர்.

விசவசாயிள் மீனவர்கள் சாதாரமான தொழில் செய்பவர்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் என அனைவரும் வேலையற்ற நிலை உள்ளது.
இதற்கு ஆக்கபூர்வமான தீர்வை அரசாங்கம் எட்டுமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இவை தவிர புதிய பாராளுமன்றத்தைக் கூட்டு;வது தொடர்பாகவோ தேர்தல் தொடர்பாகவோ இந்தச் சந்திப்பில் எதுவும் நடக்கவில்லை என்பது தான் உண்மையான விடயம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post