மகிந்த தரப்பின் ஒத்துழைப்போடு தேர்தலில் வெல்ல கூட்டமைப்பு திட்டம் - கஜேந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice மகிந்த தரப்பின் ஒத்துழைப்போடு தேர்தலில் வெல்ல கூட்டமைப்பு திட்டம் - கஜேந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice

மகிந்த தரப்பின் ஒத்துழைப்போடு தேர்தலில் வெல்ல கூட்டமைப்பு திட்டம் - கஜேந்திரன் குற்றச்சாட்டு


பிரதமர் மகிந்த ராஐபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பில் ஈடுபட்டது அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவோ அல்லது அரசியற் தீர்விற்காகவே அல்ல. மாறாக மகிந்த தரப்பின் ஒத்துழைப்போடு தாங்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே தான். இன்றைக்கு இரண்டு தரப்பினர்களுக்கும் ஒரு தரப்பினரின் ஆதரவு தேவைப்படுகின்ற நிலையில் பரஸ்பரம் ஒப்பந்தங்களைச் செய்து தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமர் மகிந்தவை கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர். அந்தச் சந்திப்பின் பின்னர் அரசியல் கைதிகள் விடுதலை அரசியல் தீர்வு குறித்து தாங்கள் பேசியிருப்பதாக ஊடகங்களுக்கு சொல்லியிருக்கின்றார்கள். இந்தச் செயற்பாடு என்பது உண்மையிலே அரசியற்தீர்வை நோக்கியதோ அரசியல் கைதிகளது விடுதலைiயை நோக்கியதோ அல்ல.

மாறாக வரப் போகின்ற தேர்தலில் தாங்கள் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதற்கான ஒரு உபாயமாகத் தான் மகிந்த ராஐபக்சவோடு கூட்டுச் சேர்ந்து சந்திப்பு நாடகத்தை கூட்டமைப்பினர் நடாத்தி முடித்திருக்கின்றார்கள்.

ஏனென்றால் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரைக்கும் கூட்டமைப்பு இந்த நாட்டின் ஆட்சியில் பங்காளிக் கட்சியாக இருந்தது. அதிலே கூட்டமைப்பினர் விரும்பிக் கொண்டு வந்த மைத்திரி ரணில் இணைந்த நல்லாட்சியும் நடைபெற்றுக் கொண்டிருநு;தது. அந்த ஐந்து ஆண்டுகளிலே அவர்கள் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அக்கறையுடன் பேசியது கிடையாது.

மாறாக அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதை நியாயப்படுத்தும் விதமாக ஐநா மனித உரிமைகள் பேரவையிலே கால அவகாசத்தை பெ;றுக் கொடுப்பதற்கு இலங்கை அரசிற்கு முழு அளவில் முண்டு கொடுத்து இலங்கை அரசை நியாப்படுத்தி கால அவகாசத்தையும் தொடர்ச்சியாக பெற்றுக் கொடுத்து வந்தார்கள்.

2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்திலே ஐநா ஆணையளார் தன்னுடைய அறிக்கையிலே பங்கரவாதத் தடைச்சட்டம் கொடுரமான தடைச்சட்டம் என்றும் அது நீக்கப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியிருந்த போதும் கூட 2019 ஆம் ஆண்டு வரை இவர்கள் ரணில் மைத்திரியோடு நல்லாட்சியில் பங்கெடுத்து வந்திருந்தனர்.

ஆவ்வாறாக இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தச் சட்டத்தை நீக்கி சட்டவிரோதமக கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தக் கைதிகளை விடுவிப்பது சம்மந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த கூட்டமைப்பினர் ரணிலோடு சேர்ந்து 13 ஆவத திருத்தத்தின் அடிப்படையில் ஒற்றையாட்சிக்குள் ஏக்கிய இராச்சிய அடிப்படையில் அரசியல் தீர்வை பெறுவதற்கு எழுத்துமூலம் சம்மதம் தெரிவித்திருந்தார்கள்.

;ஆனால் இப்பொழுது தாங்கள் அரசியல் தீர்வு குறித்தும் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் பிரதமர் மகிந்தவுடன் பேசியிருக்கிறோம் என்பது முழுக்க முழுக்க  தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற ஒரு நடவடிக்கை. தாங்கள் ஏதோ திரும்பவும் மக்களால் தெரீவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்தால் மகிந்த மற்றும் கோத்தபாய ராஐபக்சவுடன் சேர்ந்து அரசியல் கைதிகளை விடுவித்து விடுவோம் என்ற மாயைத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதற்கான முயற்சி தான் இது. .

அத்தோடு மகிந்த ராஐபக்சவிற்கும் கூட்டமைப்பின் தேவை இருக்கிறது. கூட்டமைப்பிற்கும்; மகிந்தவின் தேவைகள் இருக்கிறது. இரண்டு பேரும் பரஸ்பரம் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு தொடர்ந்தும் அந்தப் பிரதமர் மாளிகையில் அதாவது சம்மந்தர் ஐயா தங்கியிருக்கிற மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கும் அதனால் கிடைக்கக் கூடிய சகல அனுகூலங்களையும் அனுபவிப்பதற்கும் எதிர்பார்க்கின்றனர்.

அதே போல nஐனிவா நெருக்கடியில் இருந்து கோட்டா மகிந்தா தப்பித்துக் கொள்வதற்கும் தமிழ்த் தரப்பில் தெரிவு செய்யப்படுகின்ற தரப்பின் ஆதரவு தேவைப்படுகின்ற இடத்தில் இவர்களை செல்ல வைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிற இடத்திலே இவர்கள் இரகசியமாக ஒரு கூட்டு சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த விடயத்தை எங்களுடைய மக்கள் தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும். மகிந்தவோடு நடந்த சந்திப்பு அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் அல்ல. அரசியற் தீர்விற்காகவும் அல்ல. மாறாக இந்த தேர்தலிலே தாங்கள் மீண்டும் மக்களை ஏமாற்றி ராஐபக்ச மகிந்த கோட்டா கொம்பனியின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுதற்கான சதி நாடகமாகத் தான் நாங்கள் இதனைப் பார்க்கிறோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post