ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற மாவட்டங்களில் அடையாள அட்டை நடைமுறை இல்லை - ஐனாதிபதி செயலகம் அறிவிப்பு - Yarl Voice ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற மாவட்டங்களில் அடையாள அட்டை நடைமுறை இல்லை - ஐனாதிபதி செயலகம் அறிவிப்பு - Yarl Voice

ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற மாவட்டங்களில் அடையாள அட்டை நடைமுறை இல்லை - ஐனாதிபதி செயலகம் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள பிரதேசங்களில் மாத்திரமே அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தும் நடைமுறை இருக்குமென்று ஐனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்குச் சட்டம் நாளை சில இடங்களில் தளர்த்தப்படுகின்ற நிலையிலையே ஊரடங்கு குறித்து விசேட அறிவித்தலை ஐனாதிபதி செயலகம் விடுத்துள்ளது.

அதாவது கொரோனோ தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சில இடங்களில் தொடர் ஊரடங்கு ஆமல்ப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் பல இடங்களிலில் பல மணிநேரங்கள் தளர்த்தப்பட்டும் வருகிறது.

இதற்கமைய கொழும்பு உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த 21 மாவட்டங்களில் நாளை காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு 8 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்பட உள்ளது.

எனினும் மீண்டும் புதன்கிழமை இரவு எட்டு மணிமுதல் தொடர் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 11 ஆம் திகதியே மீண்டும் தளர்த்தப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கடந்த வாரம் ஊரடங்கு தளரத்தப்பட்ட போது அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலையே வெளியே செல்ல முடியுமென்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்ப்படுகின்ற இடங்களில் அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தும் நடைமுறை இல்லை என்றும் ஆனால் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் இந்த முறை தொடர்ந்தும் இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post