தேர்தல் ஆனைக்குழுவின் அனுமதி பெறப்படாத சுகாதாரதுறை இடமாற்றங்களை நிறுத்த தீர்மானம் - Yarl Voice தேர்தல் ஆனைக்குழுவின் அனுமதி பெறப்படாத சுகாதாரதுறை இடமாற்றங்களை நிறுத்த தீர்மானம் - Yarl Voice

தேர்தல் ஆனைக்குழுவின் அனுமதி பெறப்படாத சுகாதாரதுறை இடமாற்றங்களை நிறுத்த தீர்மானம்

யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார வைத்துய அதிகாரி உள்ளிட்ட அனுமதிகள் தேர்தல் ஆணைக் குழுவின் அனுமதி பெறப்படாமல் மேற்கொண்டிருப்பின் அவை அனைத்தையும் இடை நிறுத்துமாறு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட பதில்  சுகாதார மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி  இல்லாது   பதில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியாக மருத்துவர் தேவநேசன்  பணியாற்றினார்.

இந்த நிலையில்  தற்போது மாகாண சுகாதாரப் பணிப்பாளராக பணியாற்றும் மருத்துவர்  கேதீஸ்வரன் தனது பணிக்கு மேலதிகமாக  மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளராகவும் பணியாற்றுவதோடு யாழ்ப்பாணம்  மாவட்ட பதில் சுகாதார வைத்திய அதிகாரி  தேவநேசன் ஊர்காவற்றுறை தள வைத்தியசாலைப் பணிப்பாராக நியமிக்கப்பட்டார்.

இதேநேரம் தேவநேசன்  பணியாற்றிய இடத்திற்கு  மாவட்ட  திட்டமிடல் சுகாதார அதிகாரியாக பணியாற்றிய  மருத்துவர்  குமரவேல் நியமிக்கப்பட்ட  ஊர்காவற்றுறை வைத்தியசாலைப் பணிப்பாளராக பணியாற்றிய மருத்துவர் திலீபன் மாவட்ட திட்டமிடல் வைத்திய அதிகாரியாக  நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஓர் இடமாற்றத்தினை மேற்கொள்வதாயின் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும்.

அந்த வகையில் குறித்த வைத்தியர்களின் இடமாற்றத்திற்கு ஆணைக்குழுவின் அனுமதி பெறப்படாது இருப்பின் அந்த அனுமதியை பெற்ற பின்பு இடமாற்றத்தினை மேற்கொள்ள வேண்டும் என  ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post