யாழில் கொரோனோ அடையாளம் காணப்பட்ட பத்தாவது நோயாளியும் இன்று வீட்டிற்கு அனுப்பி வைப்பு - Yarl Voice யாழில் கொரோனோ அடையாளம் காணப்பட்ட பத்தாவது நோயாளியும் இன்று வீட்டிற்கு அனுப்பி வைப்பு - Yarl Voice

யாழில் கொரோனோ அடையாளம் காணப்பட்ட பத்தாவது நோயாளியும் இன்று வீட்டிற்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்று அடையாளங்காணப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பத்தாவது நபரும் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 பேர் இணங்காணப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஏற்கனவே 9 பேர் குணமடைந்த நிலையில் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்றையதினம் மேலும் ஒருவர் குணமடைந்த நிலையில் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

இதே வேளை தற்பொதும் வைத்திய சாலைகளில் சிசிச்சை பெற்று வருகின்ற ஏனைய 7 பேரும் உடல் நலம் தேறியிருப்பதாகவும் அவர்களும் மிக விரைவில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post