வெசாக்கை முன்னிட்டு ஐனாதிபதியின் பொது மன்னிப்பில் யாழ் சிறையிலிருந்தும் கைதிகள் விடுவிப்பு - Yarl Voice வெசாக்கை முன்னிட்டு ஐனாதிபதியின் பொது மன்னிப்பில் யாழ் சிறையிலிருந்தும் கைதிகள் விடுவிப்பு - Yarl Voice

வெசாக்கை முன்னிட்டு ஐனாதிபதியின் பொது மன்னிப்பில் யாழ் சிறையிலிருந்தும் கைதிகள் விடுவிப்பு


வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு  ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பபட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு  நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவருக்கு மற்றொரு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடையாததாகல் அந்தக் கைதி மீளவும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 31ன் கீழ் பெரும்குற்றங்களில் ஈடுபடாத கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

அதன்படிஇ சிறு குற்றங்களில் தண்டனை பெற்ற நபர்களுக்கும்இ 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும்இ தண்டம் செலுத்த முடியாத கைதிகளுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்.

இன்று  விடுதலைசெய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக சிறைச்சாலை வாகனத்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்


0/Post a Comment/Comments

Previous Post Next Post