கொரோனோ தாக்கம் குறித்து ரசிகர்களிடம் நலம் விசாரித்த சிம்பு - Yarl Voice கொரோனோ தாக்கம் குறித்து ரசிகர்களிடம் நலம் விசாரித்த சிம்பு - Yarl Voice

கொரோனோ தாக்கம் குறித்து ரசிகர்களிடம் நலம் விசாரித்த சிம்பு

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கடலூர் மாவட்ட ரசிகர் மன்ற மாவட்ட தலைவரிடம் சிலம்பரசன் போனில் பேசி நலம் விசாரித்துள்ளார்.
[ads id="ads1"]
தமிழகத்தில் தற்போது சென்னைக்கு அடுத்தபடிய அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மாவட்டமாக கடலூர் இருந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு திரும்பியதால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதுவரை 356 பேர் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆனந்தன் என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடலூர் மாவட்ட சிம்பு நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார்.
[ads id="ads2"]
இந்நிலையில் இந்த செய்தியை கேட்ட சிலம்பரசன் ஆனந்தனை போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் ஆனந்தன் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post