உலகின் சிறந்த வீரர் விராட் கோலி - அவுஸ்திரேலிா தலைவர் புகழாரம் - Yarl Voice உலகின் சிறந்த வீரர் விராட் கோலி - அவுஸ்திரேலிா தலைவர் புகழாரம் - Yarl Voice

உலகின் சிறந்த வீரர் விராட் கோலி - அவுஸ்திரேலிா தலைவர் புகழாரம்

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
[ads id="ads1"]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த தொடர் விறுவிறுப்பும்இ சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும்.

கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் நம்பிக்கையுடன் வருவார்கள். ஆனால் ஸ்டீவன் சுமித்தும் டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி இருப்பதால் இந்த முறை இந்தியாவுக்கு கடினமாக இருக்கும். இவர்கள் இருவரையும் சீக்கிரம் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறலாம். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்.
[ads id="ads2"]
மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய கேப்டன் விராட் கோலி ரன் குவித்து வரும் விதம் வியப்பூட்டுகிறது. தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர் தான் என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post