வடக்கு சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு சுகாதாரப் பணிமணை விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice வடக்கு சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு சுகாதாரப் பணிமணை விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

வடக்கு சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு சுகாதாரப் பணிமணை விடுத்துள்ள அறிவித்தல்

சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்களை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் விடுத்துள்ளார்.

நீண்டநாட்களாக அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகைஅலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை தங்களது சிகை அலங்கரிப்பு நிலையங்களில் அமுல்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1. சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒருமீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்.
2. முடிதிருத்துநர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
3. முடிதிருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குரிய சேவையினை நிறைவு செய்தபின் கைகளை சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு கழுவிய பின்பே அடுத்த வாடிக்கையாளருக்குரிய சேவையை வழங்க வேண்டும்.
4. மொத்தமாக பணியில் உள்ள முடிதிருத்துநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்கவும்.

உதாரணமாக முடிதிருத்துநர்கள் இருவர் பணியில் இருந்தால் முடிவெட்டிக் கொண்டிருப்பவர்கள் இருவரும் காத்திருப்பவர் இருவரும் என நான்கு வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும். கடையின் அளவு சிறிதாயின் காத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை மேலும் குறையுங்கள்.

5. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பாவிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் ஸ்பிறிற் மூலம் அல்லது கொதிக்கும் நீரில் அமிழ்த்தி தொற்றுநீக்கம் செய்யவும். தொற்றுநீக்கம் செய்யமுடியாத உபகரணங்களைப் பாவிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

6. போர்வைஇ துவாய் மற்றும் பிளேட் போன்றவற்றை வழமைபோல் ஒருவருக்கு ஒன்று எனப் பாவிக்கவும். பிளேட்டை ஒருவருக்குப் பாவித்த பின் அதனை உரிய முறையில் கழிவகற்றல் செய்யவும்;. துவாய்கள் மற்றும் போர்வைகளை தோய்த்து உலர்ந்த பின்பே பாவிக்கவும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post