யாழ் உரும்பிராயில் வீடொன்றை அமைத்துக் கொடுத்த படையினர் - Yarl Voice யாழ் உரும்பிராயில் வீடொன்றை அமைத்துக் கொடுத்த படையினர் - Yarl Voice

யாழ் உரும்பிராயில் வீடொன்றை அமைத்துக் கொடுத்த படையினர்

கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  உரும்பிராய் மேற்கு பகுதியில்  முதியவருக்கு இராணுவத்தினரால்  புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது.

ஜே 263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண்மணி தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு  வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேச செயரகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விடயம் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இன பெண்மணியான துஷாரா தேனுவர  வீட்டினை அமைத்து வழங்க முன் வந்திருந்தார்.

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை தனது பிறந்த தினமான இன்று அந்தப் பெண்மணி கையளித்தார்.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீட்டினை திறந்து வைத்து குறித்த பெண்மணியிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வில் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு இருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post