தேர்தல் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற நடவடிக்கை - யாழ் அரச அதிபர் - Yarl Voice தேர்தல் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற நடவடிக்கை - யாழ் அரச அதிபர் - Yarl Voice

தேர்தல் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற நடவடிக்கை - யாழ் அரச அதிபர்

தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகள் இன்றிலிருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் தேர்தல் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்றைய தினம் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் போது போலீசார் மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

கூட்டத்தில் தேர்தல் ஆணை குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 6 முறைப்பாடுகளின் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைள் இன்றிலிருந்து அகற்றுவவதாக தீர்மானிக்கப்பட்டு முதற்கட்டமாக இன்றைய தினம் சில  பதாதைகள் அகற்றப்பட்டதாகவும் ஏனைய பதாதைகளும் விரைவில் அகற்றப்படவுள்ளதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post