சகலருக்கும் இழப்பீடு, யாழ்.மாவட்ட செயலர் அறிவிப்பு.. - Yarl Voice சகலருக்கும் இழப்பீடு, யாழ்.மாவட்ட செயலர் அறிவிப்பு.. - Yarl Voice

சகலருக்கும் இழப்பீடு, யாழ்.மாவட்ட செயலர் அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் 3 நாட்கள் வீசிய காற்றினால் 204 குடும்பங்களை சேர்ந்த 658 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
[ads id="ads1"]
மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் புயல் தாக்கத்தின் கடந்த 21ஆம் திகதியில் இருந்து  காற்று அதிகரித்து காணப்பட்டது . புயல் அபாயத்தை தொடர்ந்து வீசிய  காற்று மணிக்கு60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன அதில் ஒரு வீடு முழுமையாகவும், மிகுதி 78வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கிறது. அதேபோல் 204 குடும்பங்களைச் சேர்ந்த 658  பேர்  3 நாள் வீசிய காற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கைதடி கலை வாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெல்லிப்பளை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து ஒரு பெண்மணி காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். சிறு முயற்சியாளர்களுடைய தொழில் பாதிப்படைந்துள்ளதுள்ளது  6 பேர் தொழில் பாதிப்பு அடைந்துள்ளார்கள் அதிலும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து அவரது படகு சேதமடைந்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளது எனினும் வீடுகள் பாதிப்படைந்த அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது காற்றின் பாதிப்பு தொடர்பான  அறிக்கையினை எமது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி யுள்ளோம்.

தொழில் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post