யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம்... - Yarl Voice யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம்... - Yarl Voice

யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம்...

யாழ் மாவட்டத்தில்  ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.......

தற்போது உள்ள நிலையில் டெங்கு நோயினைக்  கட்டுப்படுத்தும் முகமாக  இந்தக் கூட்டத்தில் பிரதேச மட்டக் குழுவினுடைய செயற்பாடுகள் அதேபோன்று கிராமிய சுகாதார குழுக்கள் திறம்பட செயற்படுவதைபற்றி அவை முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஆராயப்பட்டது.

குறிப்பாக கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிராமமாக மேற்கொள்ள வேண்டும். 

அதே நேரத்தில் அவ்வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போது எதிர்நோக்குகின்ற இடர்பாடுகளை களைவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரி நிற்கின்றோம்.

இன்றைய தினம் முக்கியமான ஒன்று காணிகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. வெற்றுகாணிகளில் அந்த காணிச் சொந்தக்காரர்கள் காணியை முறைப்படி அதாவது பற்றைகளை வெட்டி அகற்றி அதற்குமேலாக அங்கு காணப்படுகின்ற கொள்கலன்கள் சிரட்டை பிளாஸ்டிக் கொள்கலன் போன்றவற்றை அகற்றுவது பிரதானமானதாக காணப்படுகின்றது.

அதேபோன்று வீடுகளிலும் நீர் வழிந்தோடும் பகுதிகளை அடிக்கடி துப்பரவு செய்ய வேண்டிய கடப்பாடும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் தற்பொழுது கொவிட்19க்கு இணையாக இந்த டெங்கு பரவலும் நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றது ஆகவே இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு யாழ் மாவட்டத்தில் நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது 

இந்த டெங்கு தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வாரமொன்று எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது கிராம மட்டம் பிரதேச மட்டம் மற்றும் மாவட்ட மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படவுள்ள திகதிகள் தொடர்பில்
அதிகாரிகளால் விரைவில் அறிவிக்கப்படும் எனவே இந்த வாரத்தில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பெற உள்ளது.

கிராம மட்டம் பிரதேச மட்டம் மாவட்ட மட்டம் என்ற நிலையில் இடம்பெறவுள்ள குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் டெங்கு நோய் ஏற்பட சாதகமாகவுள்ள இடங்கள் அடையாளம் இனங்காணப்பட்டு அவற்றினை அகற்றி டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களும் இந்த விழிப்புணர்வு வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ,யாழ் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.குமாரவேல் ,யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயலர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post