வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்த தலைவரின் மறைவு பேரதிர்ச்சியளிக்கிறது... - Yarl Voice வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்த தலைவரின் மறைவு பேரதிர்ச்சியளிக்கிறது... - Yarl Voice

வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்த தலைவரின் மறைவு பேரதிர்ச்சியளிக்கிறது...

வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்த
தலைவரின் மறைவு பேரதிர்ச்சியளிக்கிறது
இரங்கல் செய்தியில் வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு
நலிவுற்ற மக்களின் மேம்பாட்டிற்காக வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்த ஒரு அரசியல் தலைவரின் திடீர் மறைவு பேரதிர்ச்சியை தருவதாக வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தொண்டமானின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமைச்சர்  ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தீடீர் மறைவானது அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி மலையகவாழ் மக்களுக்கும் எமக்கும் பேரதிர்ச்சியையும் பெருந்துயரத்தினையையும் ஏற்படுத்தியுள்ளது
 நாட்டு மக்களின் மேன்மைகளுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பெரும்பணி செய்த ஒருவராக காணப்படுவதுடன்அவரது நீண்ட கால அரசியல் அனுபவமும் ஆளுமைத்திறனும் மக்களிற்கும் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் பெருந்துணையாக அமைந்தன.
நான் வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் நீண்டகால போரில் நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் பொருட்டான திட்டங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது
அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஐந்து மாவட்டங்களிலும் 1375 வீடற்ற குடும்பங்களிற்கான வீடமைப்புத் திட்டத்தினை தனது அமைச்சின் கீழான நிதியினூடாக மேற்கொற்வதற்கு ஒப்புதலையும் அதற்கான நிதி ஒதுக்கீட்டினையும் எமக்கு வழங்கியுள்ளார்.
மேலும் யாழ் மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில்  தங்கியிருந்த காணியற்ற மக்களுக்கு காணி கொள்வனவு செய்வதற்கென தனது அமைச்சின் மூலம் ரூபா 22 மில்லியன் பணத்தை விடுவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாகநலிவுற்றோரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும்அவர்களிற்கென ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட பலவகையான  வெற்றிகரமான திட்டங்கள் இலங்கை வாழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
அன்னாரின் மறைவினால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை வடக்கு மாகாண மக்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் என்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post