இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் பிற்போடப்படும் பொதுத் தேர்தல் - Yarl Voice இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் பிற்போடப்படும் பொதுத் தேர்தல் - Yarl Voice

இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் பிற்போடப்படும் பொதுத் தேர்தல்

இலங்கையின் பொதுத் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாவது வாரமளவில் பொதுத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக சுகாதாரத்துறையிடம் இருந்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றைக் கோரவுள்ளது.

இதேவேளை கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் பொதுத் தேர்தலுக்கான திகதியை வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யும்படியும் கோரி பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post