பெண்களைத் தாக்கிய பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டத்தரணி சுகாஷ் - Yarl Voice பெண்களைத் தாக்கிய பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டத்தரணி சுகாஷ் - Yarl Voice

பெண்களைத் தாக்கிய பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டத்தரணி சுகாஷ்

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சம்மந்தமாக உரிய களத்திலே சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கே.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

மண் மாபியாக்களை நாங்கள் ஒருபோதும் ஆதரவை வழங்குவது கிடையர்து. அவர்களுக்கு துணையாகவும் இருக்கப் போவதில்லை. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போது அதற்கு நாங்கள் ஆதரவை வழங்குவோம். ஆனால் குடுத்தனையில் நடந்தது போன்று மக்கள் தாக்கப்படுகின்ற போதும் தண்டிக்கப்படுகின்ற போதும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் கூறினார்.

வுடமராட்சி கிழக்கில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்தாhவது..

குடத்தனையில் பாதிக்கப்பட்ட அப்பாவிக் பெண்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கினுடைய உண்மைத் தன்மையை நீதிமன்றத்திற்கு எடுத்துக் காட்டி அப்பாவிப் பெண்களை பிணையிலே எடுத்திருக்கின்றோம்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். அதாவது அப்பாவிப் பெண்களுடைய வீட்டினுள் பொலிஸார் அத்தமீறி நுழைந்து அவர்களை தாக்கிய அந்தச் செயற்பாட்டை நாங்கள் வனமையாகக் கண்டிக்கின்றோம்.

அதே வேளை சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு நாங்கள் ஒருபோதுமே எங்கள் ஆதரவைத் தெரிவிக்க மாட்டோம். மண் மாபியாக்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதில் எங்களுக்கு எற்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்காது. மண் மாபியாக்களுக்கு நாங்கள் ஒரு போதும் துணையாக இருக்கப் போவதும் கிடையாது.

இந்த இடத்திலே குடத்தனையில் அப்பாவிப் பெண்கள் இருந்த வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார் பெண் பொலிஸார் இன்றி அத்துமீறி நுழைந்து அவர்கள் மீது மிக மோசமாக தாக்கி மிலேச்சத்தனமாக நடந்து கொண்டார்க்ள்.

அந்த விடயத்தை நாங்கள் நீதிமன்றத்திற்குச் சுட்டிக்காட்டியிருந்தோம். அது மாத்திரம்; இல்லாமல் தங்களுடைய உறவுகள் வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்டதை அறிந்த இரண்டு பெண்கள் வைத்தியசாலை செல்வதற்கான இரண்டு பாஸ் அனுமதி பத்திரம் கொண்டு சென்று இருந்தும் அவர்களும் இடை வழியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

அந்தக் கைது சட்ட விரோதம் என்பதையும் நீதிமன்றத்திற்குச் சுட்டிக்காட்டியிருந்தோம். எங்களுடைய வாதத்தை ஏற்ற நீதிமன்றம் இன்றைய சூழலையும் கருத்திலெடுத்து அப்பாவிகளான அந்த நான்கு பெண்களையும் பிணையிலே விடுவித்துள்ளார்கள்.

அடுத்த கட்டமாக பொண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சம்மந்தமாக உரிய களத்திலே உரிய சட்டப்படப்டி நிச்சயமாக நடவடிக்கைகளை எடுப்போம்.

இதே வேளை மீண்டும் கூறுகின்ற விடயமென்னவெனில் மண் மாபியாக்களை நாங்கள் ஒரு போதுமே ஆதரிக்கப் போவது கிடையாது. அவர்களுக்கு எதிராக சட்டம் மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகககு நாங்கள் ஆதரவு தெரிவிப்பொம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது சட்டத்தினுடைய அடிப்படையான விடயம். ஆகவே பாதிக்கப்பட்டவர்களோடு என்றைக்கும் நாங்கள் உறுதியாக இருப்போம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post