கொரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவத் துறையினருக்கு மலர் தூவி கௌரவிப்பு - Yarl Voice கொரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவத் துறையினருக்கு மலர் தூவி கௌரவிப்பு - Yarl Voice

கொரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவத் துறையினருக்கு மலர் தூவி கௌரவிப்பு
கொரோனா வைரஸூக்கு எதிராக போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களை கௌரவிக்கும் வகையில் இன்று மருத்துவமனைகளின் மீது மலர்கள் தூவப்பட்டது.

கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கௌரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

இதன்படி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து இரு சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் மருந்து பொருட்களுடன் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்தன.

சுகோய்இ மிக் மற்றும் ஜாகுவார் ஆகிய 9 போர் விமானங்கள் டெல்லியின் வான்பரப்பில் பறந்து மருத்துவர்களை கௌரவித்துள்ளன.

அத்துடன்இ மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களை தூவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததையடுத்து மருத்துவமனைகள் முன்பு பேண்ட் வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் மீது மலர் தூவப்பட்டது. மருத்துவர்கள் மருத்துவமனையின் வெளியே வந்து நின்று மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post