மயிலிட்டியில் மோட்டார் குண்டுகள் மீட்பு - பொலிஸார் விசாரணை - Yarl Voice மயிலிட்டியில் மோட்டார் குண்டுகள் மீட்பு - பொலிஸார் விசாரணை - Yarl Voice

மயிலிட்டியில் மோட்டார் குண்டுகள் மீட்பு - பொலிஸார் விசாரணை

பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி தென்மயிலை பகுதியில் கிணற்றில் இருந்து மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மீள்குடியேற்ற கிராமமான மேற்படி கிராமத்தில் இன்று மாலை கிணற்றை இறைத்து சுத்தம் செய்யும் போதே 20 மேற்பட்ட மோட்டார் குண்டுகள் காணப்பட்டுள்ளன

கடந்த வாரம் இக்கிராமத்தில் மீள்குடியேறிய குடும்பம் ஒன்று குடிநீர் கிணற்றை இறைத்து சுத்தம் செய்யும் போதே இக்குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பாக பலாலி பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post