உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரராக ரோஜர் பெடரர் சாதனை! - Yarl Voice உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரராக ரோஜர் பெடரர் சாதனை! - Yarl Voice

உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரராக ரோஜர் பெடரர் சாதனை!

டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் பெடரர், உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
உலகின் பிரபலமான ஃபோர்ப்ஸ் சஞ்சிகை ஆண்டுத்தோறும் உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பட்டியலிடும்.
2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் முதல் 2020ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிடும்.
அந்தவகையில் இந்த பட்டியலில், சுவிஸ்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரும், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ள ரோஜர் பெடரர், 106.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டி உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டி, அர்ஜெண்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஜே.ஆர். நெய்மர் 95.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டி நான்காவது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 88.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
அடுத்தபடியாக, அமெரிக்க கூடைப்பந்து வீரர்களான ஸ்டீபன் கார்ரி 74.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஆறாவது இடத்திலும், கெவீன் டுரண்ட் 63.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.
பிரபல அமெரிக்க குழிப்பந்தாட்ட வீரரான டைகர் வுட்ஸ், 62.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் எட்டாவது இடத்திலும், அமெரிக்கன் கால்பந்து விளையாட்டின் வீரர்களான கிர்க் கஸ்சின்ஸ் 60.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒன்பதாவது இடத்திலும், கார்ஸோன் வெண்ட்ஸ் 59.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post