யாழில் தனிமைப்படுத்தபட்ட அனைவரும் மீண்டும் அனுப்பி வைப்பு - மாவட்ட இரானுவ தளபதி - Yarl Voice யாழில் தனிமைப்படுத்தபட்ட அனைவரும் மீண்டும் அனுப்பி வைப்பு - மாவட்ட இரானுவ தளபதி - Yarl Voice

யாழில் தனிமைப்படுத்தபட்ட அனைவரும் மீண்டும் அனுப்பி வைப்பு - மாவட்ட இரானுவ தளபதி

பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் அனைவரும் இன்றுடன் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
[ads id="ads1"]
இயக்கச்சியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தபட்டவர்களை முகாமிலிருந்து சொந்த இடங்களுக்கு   அனுப்பி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

பண்டாரநாயக்க மாவத்தையில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியை  சேர்ந்தவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தனிமைப்படுத்தலிற்காக அழைத்து வரப்பட்டு அவர்கள் கடந்த இரண்டு கிழமைகளுக்கு மேலாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இன்றைய தினம் அவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
[ads id="ads2"]
 எனினும் பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில்  எவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்..

0/Post a Comment/Comments

Previous Post Next Post