மதுபான விற்பனை விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் கடந்த இரு நாட்களாக அடிதடி மற்றும் விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
[ads id="ads1"]
கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக குறைவடைந்திருந்த அடிதடி மற்றெம் விபத்துக்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும் குறைவாகவே கானப்பட்டது.
இருப்பினும் கடந்த இரு நாட்களாக மதுபானசாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இவற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில் இரு நாட்களிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டும் 27 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ads id="ads2"]
இதில் நேற்று முன்தினம் அடிதடி வன்முறையில் 5 பேரும் விபத்து காரணமாக 7 பேரும் அனுமதிக்கப்பட்டதோடு நேற்றைய தினம் அடிதடி வன்முறையில் 10 பேரும் விபத்துக் காரணமாக ஐவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைத் தரப்புக்கள் உறுதி செய்தனர்.
Post a Comment