கர்நாடகாவில் நாளை முழு நேர ஊரடங்கு! - Yarl Voice கர்நாடகாவில் நாளை முழு நேர ஊரடங்கு! - Yarl Voice

கர்நாடகாவில் நாளை முழு நேர ஊரடங்கு!

கர்நாடக மாநிலத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழுநேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[ads id="ads1"]
இதன்காரணமாக பால், மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை பெங்களுரில் இன்று இரவு ஏழு மணி முதல் முழு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post