ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனோ முற்றாக ஒழிந்துவிடவில்லை - சுகாதாரப் பணிப்பாளர் - Yarl Voice ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனோ முற்றாக ஒழிந்துவிடவில்லை - சுகாதாரப் பணிப்பாளர் - Yarl Voice

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனோ முற்றாக ஒழிந்துவிடவில்லை - சுகாதாரப் பணிப்பாளர்

ஊரடங்கை 11 ஆம் திகதி முதல் தளரத்தினாலும் கொரோனோ தொற்று முற்றாக ஒழிந்து விடவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் nஐயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தளர்த்தி இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

கொரோனோ தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

அவ்வாறு ஊரடங்கைத் தளரத்துவதால் தற்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் தொற்று முற்றாக ஒழிந்து விட்டது என்று யாரும் எண்ணி விடக் கூடாது.

அதன் ஆபத்து அபாயம் இன்னமும் நீங்கவில்லை. ஆனாலும் தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்பதே உண்மையாக இருக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post