கொவிட்-19 அச்சுறுத்தல்: 1000 கூடுதல் இராணுவ வீரர்களை விக்டோரியாவுக்கு அனுப்பியது பாதுகாப்புப் படை - Yarl Voice கொவிட்-19 அச்சுறுத்தல்: 1000 கூடுதல் இராணுவ வீரர்களை விக்டோரியாவுக்கு அனுப்பியது பாதுகாப்புப் படை - Yarl Voice

கொவிட்-19 அச்சுறுத்தல்: 1000 கூடுதல் இராணுவ வீரர்களை விக்டோரியாவுக்கு அனுப்பியது பாதுகாப்புப் படை

அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிரித்துள்ள நிலையில், 1000 கூடுதல் இராணுவ வீரர்களை விக்டோரியா மாநிலத்திற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படை அனுப்பியுள்ளது.

ஒரு மாதத்தில் அவுஸ்ரேலியா முதல் கொவிட்-19 உயிரிழப்பை பதிவு செய்துள்ளதோடு, மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

80 வயதான விக்டோரியன் மனிதன் உயிரிழந்ததன் மூலம், கொவிட்-19 உயிரிழப்பின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் கூறுகையில், ‘நாங்கள் ஏறக்குறைய 850 தளவாட ஆதரவை வழங்குவோம். மேலும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஆதரவையும் வழங்குவோம். விக்டோரியா முழுவதும் சோதனை முறைக்கு சுமார் 200 தளவாடங்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உதவுவார்கள்.

இந்த ஒப்பந்தம் ஜூலை இறுதி வரை உள்ளது. ஆனால் விக்டோரியன் அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்’ என கூறினார்.

மேலும், பெப்ரவரி முதல் உள்ளூர் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு ஏ.டி.எஃப் உதவி செய்து வருவதாகவும், இந்த விடயத்தை கையாள்வதற்கும் தங்களையும் சமூகத்தையும் மேலும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க அதிகாரிகள் நன்கு தயாராக இருப்பதாகவும் ரெனால்ட்ஸ் கூறினார்.

விக்டோரியா ஒரே இரவில் 33 புதிய தொற்றுகளில் ஆபத்தான கொரோனா வைரஸ் உயர்வை பதிவுசெய்ததால், மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 1917ஆக உயர்ந்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மெல்பேர்னுக்கு வரும் அதிகாரிகள், தளவாடங்கள் மற்றும் ஆய்வக மாதிரிகள் மற்றும் பயணிகளை ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லும், சோதனைக்கு உதவும் மருத்துவ குழுக்களுக்கு உதவுவார்கள்.

அவுஸ்ரேலியாவில் கொரோனா பரவல் 75 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை எதிர்கால நகர்வினை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post