செர்ரி- ஏ: அட்லாண்டா அணியிடம் போராடி தோற்றது லஸியோ அணி! - Yarl Voice செர்ரி- ஏ: அட்லாண்டா அணியிடம் போராடி தோற்றது லஸியோ அணி! - Yarl Voice

செர்ரி- ஏ: அட்லாண்டா அணியிடம் போராடி தோற்றது லஸியோ அணி!

செர்ரி- ஏ கால்பந்து தொடரின் லஸியோ அணிக்கெதிரான போட்டியில், அட்லாண்டா அணி வெற்றிபெற்றுள்ளது.

அட்லெட்டி அஸ்ஸுரி டி இத்தாலியா விளையாட்டரங்கில், உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.

விறுவிறுப்பாக நகர்ந்த இப்போட்டியில், போட்டியின் 5ஆவது இடத்தில் அட்லாண்டா அணியின் வீரரான மார்டென் டி ரூன், லஸியோ அணிக்கு ஓன் கோலொன்றை அடித்துக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 11ஆவது நிமிடத்தில் லஸியோ அணியின் வீரர் செர்கேஜ் மிலின்கோவிச் சவுக் ஒரு கோல் அடித்தார்.

இதனையடுத்து, போட்டியின் 38ஆவது நிமிடத்தில் அட்லாண்டா அணியின் வீரர் ரொபின் கொசென்ஸ் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அணியின் மற்றொரு வீரரான ருசிலன் மாலினோவ்ஸ்க்கியி 66ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

பின்னர், அட்லாண்டா அணியின் வீரர் ஜோஸ் லஸ் பலோமினோ 80ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, இறுதியில் அட்லாண்டா அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

செர்ரி- ஏ கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை அட்லாண்டா அணி 54 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. லஸியோ அணி 62 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post