ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது! - Yarl Voice ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது! - Yarl Voice

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது.
இதன்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 இலட்சத்து இரண்டு ஆயிரத்து 436பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் 8,779பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 174பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,532ஆக உள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 234,754பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 261,150பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ள போதும், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post