ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்? - Yarl Voice ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்? - Yarl Voice

ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்?

15ஆவது ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ரி-20 ஆசியக் கிண்ண தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள போதும், இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினையால், பாகிஸ்தான் சொந்த நாட்டில் தொடரை நடத்துவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இதனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ள இலங்கையில் ஆசிய கிண்ண தொடரை நடத்துவதற்கு பாகிஸ்தான், ஆசிய கிண்ண தொடரை நடத்துவது குறித்த கூட்டத்தில் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் மாத இறுதிக்குள், தொடரை நடத்தும் உரிமையை யாருக்கு வழங்குவது என்பது குறித்து ஆசிய கிரிக்கெட் சபை அறிவிக்கும்.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இலங்கை ஆசிய கிண்ண தொடரை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் முழுத் தொடரையும் பாகிஸ்தானில் நடத்த முடியவில்லை என்றால் பாகிஸ்தான் போட்டித் தொடரை நடத்துவதைக் கைவிடவே செய்யும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னதாக தெரிவித்திருந்தமை நினைவுக்கூறத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post