துருக்கியில் மீண்டும் சர்வதேச விமான சேவை ஆரம்பம்! - Yarl Voice துருக்கியில் மீண்டும் சர்வதேச விமான சேவை ஆரம்பம்! - Yarl Voice

துருக்கியில் மீண்டும் சர்வதேச விமான சேவை ஆரம்பம்!

பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு, துருக்கியில் மீண்டும் சர்வதேச விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று (வியாழக்கிழமை) வடக்கு சைப்ரஸ், பஹ்ரைன், பல்கேரியா, கட்டார், கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கான விமானச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் முதலாம் திகதி முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இம்மாதத்தில் வெளிநாடுகளுக்கு இடையேயான விமானச் சேவையை ஐந்து கட்டமாக தொடங்க துருக்கி திட்டமிட்டுள்ளது.
இதில், முதற்கட்டமாக இத்தாலி, சூடான், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, ஜோர்டன், மொராக்கோ உள்ளிட்ட 15 நாடுகளிடையே இருதரப்பு விமானச் சேவைக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஜூன் 15ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளுக்கும், ஜூன் 20ஆம், 22ஆம், 25ஆம் ஆகிய திகதிகளில் தென்கொரியா, நெதர்லாந்து, நோர்வே, பெல்ஜியம் உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் விமானச் சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி சர்வதேச விமானங்கள் துருக்கி வருவதற்கும், துருக்கியிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post