மியான்மருக்கு 356.5 மில்லியன் டொலர்கள் அவசரகால நிதி: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு - Yarl Voice மியான்மருக்கு 356.5 மில்லியன் டொலர்கள் அவசரகால நிதி: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு - Yarl Voice

மியான்மருக்கு 356.5 மில்லியன் டொலர்கள் அவசரகால நிதி: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக, 356.5 மில்லியன் டொலர்கள் அவசர நிதியாக வழங்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது

இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் மிட்சுஹிரோ ஃபுருசாவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொவிட்-19 பரவுவதன் மூலம் சுற்றுலா, பணம் அனுப்புதல் மற்றும் விநியோக சங்கிலி ஆகியவற்றின் சரிவினால் மியான்மர் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்த நிதி கொவிட்-19 மியான்மரின் அவசர நிதி தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும். அபிவிருத்தி பங்களார்களிடமிருந்து ஆதரவையும் ஊக்குவிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, சர்வதேச நாணய நிதியம், நேபாளத்துக்கு 214 மில்லியன் அமெரிக்க டொலர்கள், எத்தியோப்பியாவிற்கு 411 மில்லியன் டொலர்கள், டொமினிகன் குடியரசிற்கு 650 மில்லியன் டொலர்கள், மொசாம்பிக்கிற்கு 309 மில்லியன் டொலர்கள், ஈக்குவடோருக்கு 643 மில்லியன் டொலர்கள், அவசர கடன் உதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post