மும்பை தொடர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உயிரிழப்பு! - Yarl Voice மும்பை தொடர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உயிரிழப்பு! - Yarl Voice

மும்பை தொடர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உயிரிழப்பு!

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேமன் சிறையில் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர் தனது 54 ஆவது வயதில் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யூசுப் மேமனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து சிறைத்துறை தரப்பில் தற்போது வரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்தள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 1993 ஆண்டு  அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 700 மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் தாவூத் இப்ராகிம்,  யாக்கூப் மேமன்,  உள்ளிட்ட குழுவினர்களால்  நடத்தப்பட்டது.

இதையடுத்து  இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம்,   டைகர் மேமன் உள்ளிட்ட பயங்கரவாதிகள்  பாகிஸ்தானுக்கு தப்பிச்சென்றனர். அவர்களை தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் தொடர்புடைய யாக்கூப் மேமன்,  யூசும் மேமன் உள்ளிட்டோரை பொலிஸார்  கைது செய்ததுடன் முக்கிய குற்றவாளியாக பெயரிடப்பட்ட யாகூப் மேமனுக்கு 2015 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post