லா லிகா கால்பந்து தொடர்: அத்லெடிகோ மட்ரிட் அணி அபார வெற்றி! - Yarl Voice லா லிகா கால்பந்து தொடர்: அத்லெடிகோ மட்ரிட் அணி அபார வெற்றி! - Yarl Voice

லா லிகா கால்பந்து தொடர்: அத்லெடிகோ மட்ரிட் அணி அபார வெற்றி!

லா லிகா கால்பந்து தொடரின் ஒசசுனா அணிக்கெதிரான போட்டியில், அத்லெடிகோ மட்ரிட் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
எல் சதர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே அத்லெடிகோ மட்ரிட் அணி ஆக்ரோஷமாக விளையாடியது.
இதற்கமைய போட்டியின் 27 மற்றும் 56ஆவது நிமிடங்களில் என அத்லெடிகோ மட்ரிட் அணியின் ஜோவா ஃபெலிக்ஸ் இரண்டு கோல்களை அடித்தார்.
மேலும், மார்கோஸ் லோரென்ட் 79ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், அல்வரோ மோராட்டா 83ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், யானிக் கராஸ்கோ 88ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
இதன்படி, அத்லெடிகோ மட்ரிட் அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது.
லா லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை அத்லெடிகோ மட்ரிட் அணி 49 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. ஒசசுனா அணி 35 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post