ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் 7,790பேர் பாதிப்பு- 182பேர் உயிரிழப்பு - Yarl Voice ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் 7,790பேர் பாதிப்பு- 182பேர் உயிரிழப்பு - Yarl Voice

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் 7,790பேர் பாதிப்பு- 182பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 7,790பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 182பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 561,091ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,660ஆக உள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 239,468பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 313,963பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ள போதும், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது பெரும்பாலான நாடுகளின் மத்தியில் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


[ads id="ads1"]

0/Post a Comment/Comments

Previous Post Next Post