வடகொரியாவில் இந்த மாதத்திலிருந்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்! - Yarl Voice வடகொரியாவில் இந்த மாதத்திலிருந்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்! - Yarl Voice

வடகொரியாவில் இந்த மாதத்திலிருந்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

கடுமையான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட வடகொரியா, இந்த மாதத்திலிருந்து பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, இந்த செய்தியினை தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாடசாலை நுழைவாயிலும், வகுப்பறைகள் மற்றும் நிர்வாக அலுவலகங்களிலும் தெர்மோமீட்டர்கள் மற்றும் கிருமி தொற்று நீக்கம் என்பன வைக்கப்படும்,

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் தீவிர சோதனைக்கு பின்னரே பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப பாடசாலைகள் மற்றும் மழலையர் பாடசாலை கட்டடங்களை கிருமி நீக்கம் செய்வதற்கும் சிறந்த முன்னுரிமை வழங்கப்படும்.

வட கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எவரும் இலக்காக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post