புண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி! - Yarl Voice புண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி! - Yarl Voice

புண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி!

ஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், பேடர்போன் அணிக்கெதிரான போட்டியில், டோர்ட்மண்ட் அணி 6-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது.
பென்டலர் அரினா விளையாட்டரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின.
இதில் டோர்ட்மண்ட் அணி சார்பில், தோர்கன் ஹசார்ட் 54ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஜெடோன் சான்சோ 57ஆம், 74ஆம் மற்றும் 92ஆம் நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்தார்.
தொடர்ந்து, அச்ராப் ஹகீமீ 85ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், மார்செல் ஷ்மெல்சர் 89ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
பேடர்போன் அணி சார்பாக, உவே ஹேன்மியர் 72ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.
புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின் புள்ளிபட்டியலில், டோர்ட்மண்ட் அணி 60 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பேடர்போன் 19 புள்ளிகளுடன் இறுதி இடத்திலும் உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post